கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம்
கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம் ஆரம்பித்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் இன்று (20) காலை 11 மணியளவில் ஏ 9 வீதி நகர் பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் முன் நின்று தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்திய பின்னர் டிப்போ சந்தி அண்மித்த மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் நிறைவடைந்தது. “வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நாங்கள் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்தும் தொடர்ச்சியாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவில் முன்றலில் 20.02.2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 3287 நாட்களைக் கடந்தும் எந்த வித பதிலும் நீதியும் கிடைக்கப்…
மேலும் படிக்க