சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல்

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உ றுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், மற்றும் யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், யாழ்.பல்கலைழகமாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான மேற்படி கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகள், யானை – மனித மோதல், போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ உரை இரத்து இனப்படுகொலையே காரணம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்கள் மீது ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- “ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த உரை அல்லது உரையாடல் நிகழ்வுகள் எந்தக் காரணத்துக்காகவும் இரத்துச் செய்யப்படுவதில்லை. அவ்வாறு இரத்துச் செய்வதை கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகவும், தன் புகழுக்கான இழுக்காகவும் அந்த நிறுவனம் கருதுகின்றது. இவ்வாறான நிலையில், நாமல் ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டமை அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதற்கு, நாமலின் குடும்பத்தால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையே காரணம். நாமல் ராஜபக்ஷவின் குடும்பம் தமிழர்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சொல்லொண்ணாத் துயரங்கள் உலகறிந்தவை. அந்தப் பாதகமான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிற்ற ப்பட்ட சம்பவம் மாணவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக 30 மாணவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி, இது தொடர்பான இறுதி முடிவு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு இம்மாதம் 11ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கோரியிருந்தது.இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது.குறித்த விசாரணை அறிக்கையானது கடந்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.தேசிய புலனாய்வு முகவரியினால் வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கொக்குத்தொடு வாயில் மக்களின் காணிகளை ஊடறு த்து யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கும் செயற்பாடு;

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கும் செயற்பாடு; முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவந்த – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 23.02.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுதனதுமாறும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள கூமாவடிக்கண்டல்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒக்ஸ்போர்ட் யூனியனும் நாமல் ராஜபக்ஷவின் உரையை இரத்து செய்துள்ளது.

இலண்டன் கேம்பிரிட்ஜ் யூனியனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் யூனியனும் (Oxford Union) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரையை இரத்து செய்துள்ளது. நிகழ்வு நடைபெற 24 மணித்தியாலங்களே இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியத் தமிழ் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் பிரச்சாரங்களே இந்த இரத்து நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும். போர்க்கால மீறல்கள், ராஜபக்ஷ குடும்பத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.உரை நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்ட போதிலும், நாமல் ராஜபக்ஷ தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இலண்டனில் உள்ள சிங்கள பௌத்த அமைப்புகள் மற்றும் பௌத்த துறவிகளை அவர் சந்தித்து வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் தாயகம் எங்கும் கையெழுத்து சேகரிக்கின்ற பணி

நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும்  புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கையெழுத்து சேகரிக்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (22) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாகவும் கையெழுத்து சேகரிக்கும் பணி ஒன்று   முன்னெடுக்கப்பட்டது.இக்கையெழுத்து சேகரிக்கும் பணியானது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் துரையப்பா காந்தன்,ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர் ,தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்து உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

காவல்துறை யினர்.துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி போராட்டம்

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள்  ஃபயாஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று யாழ். பஸ் நிலையப் பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகளுடன், வேலன் சுவாமி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், யாழ். மாநகர உறுப்பினர் நிசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்தனர். குறித்த போராட்டத்தின் போது பொலிசாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள், குறித்த கொலைக்கு காரணமான பொலிசாரை தண்டிக்க வேண்டும் என்றும் இவ்வாறான மிலேச்சத்தனமான கொலைகளை காவல்துறை. இனி மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முன்பதாக கடந்த 10 ஆம் திகதி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பெரும்போக அறு வடை நெல்லினை வறிய குடும்பங்க ளுக்கு பகிர்ந்து அளித்த விவசாயி

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒவ்வொரு வருடமும் பெரும்போக அறுவடை முடிவடைந்ததும் தாம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில் அறுவடை செய்த நெல்லினை தமது பகுதியில் நெற்செய்கை  மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றார். நேற்றுமுன்தினம் (20) தர்மபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வைத்து தம்மால் முடிந்த வரையில் அறுவடை செய்த நெல்லின் ஒரு பகுதியில் 30 குடும்பங்களுக்கு ஒரு மூட்டை வீதம் வழங்கினார்.இதன்போது கூறுகையில், தமது பெயரினையோ அல்லது தமது முகத்திலையோ ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை எனவும் பிறருக்கு உதவும் மனம் இருந்தால் மட்டும் போதும், என்னால் முடிந்தவரை ஒவ்வொரு வருடமும் இதேபோன்று வழங்கி வருவேன். வழங்குவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சியைக் கொண்டுநடத்துமாறு ஆளுநர் வேதநாயகனு க்கு உத்தரவு! கஜேந்திரகுமார்

இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை. இந்த விடயத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது:- “தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், அரச அதிகாரிகளும், திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்துகொண்டனர். ஆனால், காணிகளை இழந்த மக்கள் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை. இது எந்த வகையில் நியாயம்? தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் தொடர்பில்லை. இராணுவமே இந்த ஆக்கிரமிப்பைச் செய்தது. அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாதான் இந்த விகாரையை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டார்.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம்

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம் ஆரம்பித்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் இன்று (20) காலை 11 மணியளவில் ஏ 9 வீதி நகர் பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் முன் நின்று தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்திய பின்னர்  டிப்போ சந்தி அண்மித்த மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் நிறைவடைந்தது. “வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நாங்கள் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்தும் தொடர்ச்சியாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவில் முன்றலில் 20.02.2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 3287 நாட்களைக் கடந்தும் எந்த வித பதிலும் நீதியும் கிடைக்கப்…

மேலும் படிக்க