உலக செய்திகள் செய்திகள் 

காசாவில் போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (31) காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6 இற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, பொலிஸ் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் 3 குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.காசா நகரில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

பெந்தோட்டை பகுதியில் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

அளுத்கம, பெந்தோட்டை பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (31) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 5.105 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் தெரு மதிப்பு ரூ. 7 கோடிக்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி மீது காவல்துறை யினர் துப்பாக்கிப் பிரயோகம்

கிளிநொச்சியில் காவல்துறையின் கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று (01) அதிகாலை கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் சில்லுகள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான பாரவூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்.

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.அந்தவகையில் இன்று (01) காலை கொட்டும் மழைக்கு மத்தியிலும் தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள நிலையில் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் இதேவேளை  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தையிட்டி விகாரை தொடர்பில் உண்மைக்கு அப்பாற்பட்ட விடயங்களை யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்..  

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ரூ. 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா மற்றும் மருமகன் கைது

ரூ.2 கோடி 30 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேகநபர்களை சம்மாந்துறை  காவல்துறை.கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை.பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றில் நேற்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கைதான 49 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரது வாக்குமூலம் மற்றும் சம்மாந்துறை  காவல்துறை.நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துறை புற நகர் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்  காவல்துறை.அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பிரகாரம் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான என். றிபாய்டீன் தலைமையிலான காவல்துறை.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். அருட்தந்தை மா.சக்திவேல்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். பயங்கர வாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி, ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது சிங்கம் போன்ற கொடிய முகத்துடன், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்காக வரைபை வெளியிட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(30.01.2026) கொழும்பு – நீதி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிவில் செயற்பட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அருட்தந்தை மா.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை மா.சக்திவேல், “ ஜெ. ஆர். ஜெயவர்த்தனவிற்கு இல்லாத கொடிய முகம் ஒன்று அநுரவிற்கு இருக்கிறது. இந்த சிங்கம் தெற்கில் உள்ள தமிழ் மக்களை வேட்டையாட காத்திருக்கிறது. இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழர்கள் சூரையாடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

முறையற்ற வகையில் வெளிநாடு சென்றவர்கள் இடையூறுகளின்றி நாடு திரும்ப அனுமதி.ஆனந்த விஜேபால

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் எந்தவித இடையூறுகளும் இன்றி நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதற்கு வசதியாக தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில், அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு தாயகம் திரும்ப விரும்புவோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னர் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய சிலர், விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலைப்பாட்டை அகதிகளுக்கான ஐக்கிய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள்உளவாளிகள்.சி.சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் நுழைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் , தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.   அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார்.   அதேபோல் சாணக்கியன் எம்.பி எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாமல் உள்வாங்கப்பட்டு விட்டார். உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. அவர் எப்படி அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அது மர்மமாகவே இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது

கரையோர காவல்துறை பிரிவின் ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 63 வயதுடைய கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் மற்றும் சிறுமி ஒருவர் காயமடைந்து கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது. அதன்படி, இத்துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளால் ஹெட்டியாவத்தை பகுதியில் நேற்று பகல் கைது செய்யப்பட்டதுடன், இதன்போது முச்சக்கரவண்டி…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது குற்றமாகும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அனுமதி பெறாமல் இலச்சினையைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கெதராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம், எதிர்வரும் 2026, பெப்ரவரி மாதம், 19,20,21,22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதன் போது பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் பல்கலைக்கழக இலச்சினை பொறிக்கப்பட்ட கழுத்துமாலை, பட்டச் சான்றிதழ் சுருள் மற்றும் பல்கலைக்கழகப் இலச்சினை பொறிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் என்பன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படுவதாகப் பலகலைக்கழக நிர்வாகம் அறிகிறது. இது சட்டப்படி குற்றச்செயலொன்றாகும். பல்கலைக்கழக மூதவை மற்றும் பேரவையின் அனுமதியுடன், நடைமுறைகளின் ஊடாக பல்கலைக்கழக இலச்சினையைப் பயன்படுவதற்குப் பதிவாளரிடமிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட வேண்டும்.…

மேலும் படிக்க