செய்திகள் தாயகச் செய்தி 

காணாமல் ஆக்கப் பட்டோர் விவகார த்தில் உரியநீதி வேண்டும்! ரவிகரன் வலியுறுத்தல்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வர வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர், தொடர் போராட்டத்தின் 3007ஆவது நாளில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை, கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் இராணுவத்திடம் கையளித்த உறவுகளை, மீளக் கையளிக்குமாறு அவர்களின் உறவுகள் தொடர்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவும், குறிப்பாக எமது உறவுகள் வட்டுவாகல் பகுதியிலும் , முகாம்களிலும், கடலிலும் கைதுசெய்யப்பட்டதுடன் வெள்ளைவானிலும் கடத்தப்பட்டனர் இவ்வாறாக பலவழிகளிலும் எமது உறவுகளுக்கு கடந்தகால அரசுகள் துன்பங்களை விளைவித்தன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இவ்வாறு கையளிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம்

மட்டக்களப்பு – கரடியனாறு  காவல்துறை பிரிவிலுள்ள பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக்காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். கரடியனாறு- வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய சிவகுமார் என்ற கூலித் தொழிலாளியே மரணித்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.இச்சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர் வேளாண்மை வாடியொன்றில் காவலாளியாகப் பணியாற்றிய இவர் கடைத்தெருவிற்குச் சென்று வருவதாக அவரது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளபோதிலும் இரவாகியும் வயல் வாடிக்குத் திரும்பவில்லை. இவரை தேடியவேளையில் வயல்வாடிக்கு மிகஅண்மித்துள்ள ஆற்றுநீரோயில் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கரடியனாறு காவல் துறையினருக்கு அறிவித்ததையடுத்து ஏறாவூர் திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நசிர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டு சடலத்தை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க முற்பட்டபோது அருகிலிருந்த வயல்வாடியின் நீர் பம்பியுடன் தொடர்புபடுத்தி வலது கால்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக வர்த்தமானியை திரும்பப் பெற்றுள்ளது அரசாங்கம்

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 கடந்த ர்ச் 28, அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில்,வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக களத்தில் இறங்கியிருந்த நிலையில்,தற்சமயம் குறித்த வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் 100 பேரில்,ஈழத் தமிழர்கள் இருவர் தெரிவு

ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் 100 பேரில், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசி ரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். சிங்கப்பூரை தளமாகக் கொண்டு வெளியாகும் ‘ஆசிய விஞ்ஞானி’ என்ற சஞ்சிகை ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் -100 பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். அதன்படி விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன்  பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில்,…

மேலும் படிக்க
இலங்கை செய்திகள் 

வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கே.டி. லால் காந்த

வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என காணி அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்  மேலும் கூறுகையில், வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கைவிடப்பட்டிருக்கும் அவர்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமையவே வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொய்யான கோஷத்தை முன்வைத்து வடக்கு மக்களை வீதியில் களமிறக்கி அரசுக்கு…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பாசிக்குடாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இ.போ.ச பஸ் விபத்து:

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பஸ்ஸில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.   உயிரிழந்தவரின் உடல் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றர்.

மேலும் படிக்க
இலங்கை தாயகச் செய்தி 

காணிகளை கையகப் படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத் திற்கு இல்லை

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல் நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.   இதுவரை காலமும் வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும், காணிகளை சொந்தமாக வைத்திருப்பவர்களிடம் தங்கள் உரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன்,…

மேலும் படிக்க
இலங்கை சிறப்புச் செய்தி 

பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார். சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மரணிக்கும்போது அவருக்கு 76 வயதாகும். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி களனியில் பிறந்த அவரது இயற் பெயர் வன்னி ஆராச்சிகே மாலினி செனஹெலதா பொன்சேகா எனும் பெயரில் பிறந்த இவர், பின்னர் இலங்கை சினிமாவில் மாலினி பொன்சேகா எனும் பெயரில் பிரபலமானார். 1963 ஆம் ஆண்டு மேடை நாடகங்களில் அறிமுகமான திருமதி மாலினி பொன்சேகா, 1968 ஆம் ஆண்டு புஞ்சி பபா எனும் சிங்கள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 1963 ஆம் ஆண்டு “நோரத ரத” நாடகத்துடன்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்;

2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; அரசியல்வாதிகள் வந்தால் கட்டிப்போடுவோம் என பொதுமக்கள் சீற்றம்   வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் 2 வருடமாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பிரயாணம் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோகி வருவதாகவும் இதுவரை அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். மகிழவெட்டுவான் நரிப்புதோட்டம், கல்குடா, நெல்லூர் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் கடந்த 2023 டிசம்பர் மாதம் உடைந்து வீழ்ந்துள்ளது.இதனால் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நகரில் இருந்து அந்த பிரதேசத்துக்கு செல்லும் பொது போக்குவரத்து பஸ் வண்டி பாலம் ஊடாக செல்ல முடியாது.அந்த பாலம் வரை…

மேலும் படிக்க
இலங்கை தாயகச் செய்தி 

சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்ப்பு

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில் பணியாற்றி உள்ளார் எனவும் தெரியவருகின்றது. குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் நேற்று காலை 10. மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவ இடத்திற்கு முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர். பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  …

மேலும் படிக்க