செய்திகள் தாயகச் செய்தி 

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் மூவருக்கு ரூ. 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம்

சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூ. 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த வியாழக்கிழமை(22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பி செல்வதற்காக உழவு இயந்திரத்துடன் வீதி வழியாக சென்ற போது குறித்த சோதனை நடவடிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் 3 உழவு இயந்திரங்கள் உட்பட 3 சந்தேகநபர்களையும் மணலுடன் கைது செய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியாவில் காவல்துறையினரை மோதி தள்ளிய வாகனம்

வவுனியா ஈரட்டை, களுகுன்னமடுவ பகுதியில் இன்று 24 இடம்பெற்ற சம்பவம் .கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை காவல்துறை அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோதே, லொறி சாரதி  காவல்துறை அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாககாவல்துறையினர்  தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது  காவல்துறை அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது. விபத்தில் காயமடைந்த இரண்டு  காவல்துறையினரை தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து  காவல்துறையினரிடம்.  ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் லொறியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைப்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள்.

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி காவல்துறையினர், குறித்த இடத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உயிரிழப்பு

மட்டு கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உ+யிரிழப்பு மட்டக்களப்பு தலைமையக  காவல்துறை.பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து இன்றிரவு (23) 7 மணியளவில் குதித்த யுவதி ஒருவரை பிரதேச இளைஞர்கள் மற்றும் . காவல்துறையினர் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுசாயினி எனும் யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளது இவர் கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறை. மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்து

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் கலந்துரையாடல்;எதிர்ப்பேன் என்கிறார் – ரவிகரன் எம்.பி

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் வெள்ளியன்று பாராளுமன்றில் கலந்துரையாடல்; எதிர்ப்பேன் என்கிறார் – ரவிகரன் எம்.பி தமிழர்கள்மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்துவதுதொடர்பிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளநிலையில், குறித்த கலந்துரையாடலில் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 21.01.2026இன்று இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கிவுல்ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 23ஆம்திகதி கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் குறித்தவிடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறு அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

கதிரியக்க தொழில்நுட்ப வியலாளர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேற்றையதினம் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரச்சினை தொடர்பில் நேற்றையதினம் இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் நபரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல் தொடர்பில் ஏற்கனவே உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஒரு வார காலத்திற்குள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை ஏற்படுத்தித் தருவதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வைத்தியசாலையின்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அரசு வறுமையையும் ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம ஒழிப்புத் திட்டம் ; ரவிகரன் குற்றச்சாட்டு

அரசு மக்களுக்கு வறுமையையும் ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம என்ற வறுமைஒழிப்புத் திட்டத்தையும் செயற்படுத்துகின்றது; ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு படையினர் மற்றும் அரசதிணைக்களங்கள் மக்களின் வாழ்வாதாரக் காணிகளை அபகரித்திருத்தல், சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த தவறுதல், இறுதிப்போரில் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத்தவறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளின்மூலம் அரசானது மக்களுக்கு வறுமையை ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம என்ற நலன்புரி நன்மைகள் என்னும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை திட்டத்தை செயற்படுத்துவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உண்ண உணவுக்கு மாற்றாக உணவைப் பயிரிட்ட மக்களின் வாழ்வாதார நிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் விடுவிக்குமாறும், தரையிலும் கடலிலும் மக்களை தொழில் புரியக்கூடியவகையில் வழிவகைகளை ஏற்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் சிறையில் வாடும் உறவுகளை விடுவித்து அவர்கள் குடும்பங்களை ஆற்றுப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 400 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது

பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.இதன்பிரகாரம் ,பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் 1750 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை என்பது பல வருடங்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் மூலம் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தது.பெருந்தோட்ட கம்பனிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்துக்கமைய, இம்மாதத்திலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை வௌியிட்டுள்ளது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த புதிய நாணயத்தாள்களின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களடங்கிய தகவல்களே மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளன. இத்தாளின் நம்பகத் தன்மையை எளிதாக அடையாளம் காண்பதற்கான அறிவுரைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த 2000 ரூபா நாணயத் தாளை வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால்,வாளினை கொண்ட சிங்கம் முழுமையாக தெளிவாக தெரியும், நிறம் மாறும். பாதுகாப்பு நூல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தினை காட்டுகிறது.இதிலிருந்து போலித்தாள்களை அடையாளம் காண முடியும். மேலும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு…

மேலும் படிக்க