சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் கோரிக்கை!

  May 10, 2025 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு எதிர்வரும் மே 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையில், உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி அமலநாயகி இவ்வாறு தெரிவித்தார். 16வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எங்களுக்கு நடந்த இனஅழிப்புக்கான எந்த நீதியும் கிடைக்கவில்லை. இலங்கை அரசின் இன அழிப்பு நாள் மே 18 அதை எம்மால் ஒருபோதும் மறந்து விட முடியாது, அதனை முன்னிட்டு எதிர்வரும் 12…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் ஒருவர் பலத்த காயம்

அச்சுவேலியில் இன்று காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்..! இன்று அதிகாலை 6.15 மணியளவில் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு சென்ற வேளை இடைவழியில் மறித்த இனத்தெரியாத கும்பல் கடை உரிமையாளர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த வீதியில் கார் ஒன்றில் காத்திருந்த இனந்தெரியாதோர் கடைக்குச் சென்றவரை இடையில் வழிமறித்து பொல்லுகளால் கடுமையாக தலை, கை என்பவற்றில் தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதல் நடாத்திய இருவர் தம்மை அடையாளம் காணாதவாறு முகத்தை துணியால் கட்டி மறைத்திருந்ததாக தெரியவருகிறது. தாக்குதலுக்குள்ளானவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உணவகமொன்றினை நடாத்திவரும் சின்னையா ஆலாலசுந்தரம் (54)வயதுடையவரே இவ்வாறு பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வாழைச்சேனையில் மண் அகழ்வை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை கிண்ணியடி பிரதேசத்தில் மீன் வளர்க்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்வை எதிர்த்து பிரதேச மக்கள் மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தை இன்று வியாழக்கிழமை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிசாருடன் பேசுவதற்கு சென்ற தமிழரசு கட்சி வேட்பாளர் உட்பட இருவரை கைது செய்ததயைடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், பொலிஸாரின் அடாவடியை எதிர்த்து சுட்டெரிக்கும் வெய்யிலில் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணியடி ஐஸ் உற்பத்தி நிலையத்துக்கு அருகாமையிலுள்ள தனியார் காணி ஒன்றில் 2021 ம் ஆண்டு மீன் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்ந்து வெளியிடங்களுக்கு எற்றிச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை கண்டித்து கடந்த காலத்தில் கிராமத்து இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களையடுத்து இத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் தாவடி ஆலயத்தில் யானை மிதித்து பெண்கள் காயம்

யாழ் தாவடி-ஆலயத்திற்கு கொண்டு வந்த யாணை மிதித்து பக்தர்களிற்கு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள ஆலயத்தில் நேற்றைய தினம் மஞ்ச உற்சவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தெற்கில் இருந்து யானை கொண்டு வரப்பட்டு மஞ்சத்தின் முன்பாக அழைத்து வரப்பட்டுள்ளது. மஞ்சம் முன்பாக தீப்பந்தங்களை எடுத்துச் சென்ற சமயம் யானை மிரண்டதில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஓர் பெண்ணின் கால் பாதம் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்தி மூன்று பேர் கைது

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்திமூன்று பேர் கைது இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து, 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன் இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (6) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய சந்தேகநபர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மின்னல் தாக்கியதில் முன்னாள் போராளி உயிரிழப்பு

இன்று 07/06/2025 புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மதியம் 2:00 மணி அளவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் 8ம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிப்பைச் சேர்ந்த அருமைநாயகம் .யசோதரன் [ வசக்கண்டு ] என்னும் முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார்

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

விடுதலைப்புலிகளுக்கு அகவை 49

புதிய தமிழ்ப் புலிகள் என்பது 1972 மே 22 ஆம் நாள் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தனது 17வது வயதில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பைத் தொடங்கினார் இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்ப்பதையும், தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட புரட்சிகர அமைப்பாகும் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் 1976 மே 5 ஆம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறைக்கு கொண்டுகொண்டு வரப்பட்டது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மன்னார்-யாழ் பிரதான வீதியில் பஸ் விபத்து; 

மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் நேற்று 03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பஸ் கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பஸ்ஸில் மோதி குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிலில் நின்ற நபரும் காயமடைந்ததுடன்,அவரது மோட்டார் சைக்கிலும் பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த விபத்தில் ஹென்டனர் ரக வாகனத்தின் சாரதி,உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது…

மேலும் படிக்க