இறுதிப் போரில் இடம் பெற்ற குற்றங்க ளுக்கான பொறுப்புக் கூறலை உறுதி செய்ய ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்
இறுதிப் போரில் இடம்பெற்ற அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான கூட்டுறவு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த துன்பப்படும் வயதான தமிழ் தாய்மார்கள் சார்பாக குறித்த கடிதம் பொதுச் செயலாளர் ஏ.லீலாதேவியால் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை பாதுகாப்புப் படையினராலும், அதனுடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களாலும் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்களான நாங்கள், பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகிறோம். பிப்ரவரி 20,…
மேலும் படிக்க