செய்திகள் தாயகச் செய்தி 

உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள்

தரையில் இடம்பெறும் மணல் கொள்ளையை தடுக்க முயற்சிக்கும் காலத்தில் கொள்ளையர்கள் நேரடியாக கடல் மற்றும் ஆற்றில் அகழ ஆரம்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழர் பிரதேசமான திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன. திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே ஐந்து டிங்கி படகுகளை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது படகில் சுமார் 30 லிட்டர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் நாவற்குழி பகுதியில் வாகனம் விபத்து இரு இளைஞர்கள் உயிரிழந்து ள்ளனர்.

கிளிநொச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து சம்பவம் நாவற்குழி பகுதியில் நேற்று (14.01.2026) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக டிப்பர் வாகனம் மின்கம்பம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பம், சுவர் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இரு இளைஞர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு பத்து மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது. பிரதான வீதியில் காவல்துறையினர் வீதிச்சோதனை நடத்திய நிலையில், உள்வீதியில் நின்ற போக்குவரத்து காவல்துறையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது போக்குவரத்து காவல்துறையினர் ரோச் லைட் அடித்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட போது அதனை மீறிச் சென்றவர்களை நிறுத்த சென்ற போதே இந்த நிலைமை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், காவல்துறையினர் இளைஞர்களை தலைக்கவசத்தினால் தாக்கியதுடன், அவர்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் தொடர்ந்து தாக்கியுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அரசியல் நோக்குடன் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் அ.அன்னராசா

அரசியல் நோக்குடன் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் அ.அன்னராசா எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் புதுச்சேரி, இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நெடுந்தீவு மற்றும் அனலைதீவு கடற்பரப்பிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றன. இவ்வாறு அவர்கள் இலங்கை கடற்பரப்பினை அழித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்குமாறு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அநுரகுமார அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு

அநுரகுமார அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு எதிர்வரும் 20/01/2026 ( புதன்கிழமை ) காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவில் எழுவைதீவு J/39 கிராம அலுவலர் பிரிவில் காளவாடியடைப்பு என்ற இடத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 53 பேர்ச்சஸ் அளவுள்ள காணி சிறீலங்கா கடற்படையின் எலரா படையணி முகாம் அமைப்பதற்காக நில அளவைக் காரியாலயத்தினால் சுவீகரிப்படவுள்ளது. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இதே காணியை கடற்படையினருக்காக அபகரிக்க முயன்றபோது எழுவைதீவு மக்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம் ..PSTA சட்டத்தின் ஆபத்து தொடர்பில் யாழில் கலந்துரையாடல்.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம் ..PSTA சட்டத்தின் ஆபத்து தொடர்பில் யாழில் கலந்துரையாடல். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் ( PSTA) தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிப்வு படுத்தும் கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் பொது நூலக மண்டபத்தில் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக முன்மொழியப்பட்ட PSTA பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் புதிய சட்டமா வர உள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது, ஆனால் பரந்த வரையறைகள் மற்றும் கடுமையான பிரிவுகள் காரணமாக, இது பொதுமக்களின் போராட்டங்கள், சிவில் சமூக செயற்பாடுகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினரை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை மாவட்டசெயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவி பிரதேசசெயலரைச் சந்தித்த ரவிகரன்

முல்லை மாவட்டசெயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவி பிரதேசசெயலரைச் சந்தித்த ரவிகரன் எம்.பி; கேப்பாப்புலவு காணிவிபரங்களைக் கோரினார் முல்லைத்தீவு மாவட்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப்பிரதேசசெயலாளர் ஆகியோரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன். 12.01.2026நேற்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மிக முக்கியமாக இச்சந்திப்பில் கேப்பாபுலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்களை மாவட்டச்செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேசசெயலாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியிருந்தார். குறிப்பாக கடந்த 07.01.2026அன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றபோது கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத்தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முரசுமோட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.! பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் விசுவமடுவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. உயிரிழந்தோர் கிளிநொச்சி – விசுவமடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கடலரிப்புகளின் ஆபத்திலிருந்து அம்பாறை கரையோரங்களை பாதுகாக்க அரசுக்கு மகஜர்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நிலவும் தீவிர கடலரிப்பு தொடர்பான பாதிப்புகளைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசாங்கத்திடம் கூட்டு மகஜர் ஒன்றை சமர்ப்பிப்பதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் கூடிய பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.  மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பொத்துவில்.ஆக்கிய பகுதிகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன மாளிகைக்காடு மையவாடிப் பகுதியில் கடலரிப்பு தீவிரமடைந்ததில், அங்குள்ள ஜனாஸாக்களின் (உடல்கள்) எச்சங்கள் வெளியே தெரியும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடலரிப்பு நிலவரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுர…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஆதரவு அளிக்காதென பா. உ சிறீதரன் தெரிவித்துள்ளார்

கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு அளிக்காதென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதா என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் கூறினார். கல்வித் துறை தொடர்பான சில நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னிறுத்தியே,பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டைக்கு அப்பால், அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதேவேளை,கல்வி அமைச்சரான…

மேலும் படிக்க