Category: சிறப்புச் செய்தி
தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன – ரவிகரன் எம்.பி
நாடகநடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன – ரவிகரன் எம்.பி ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து…
மேலும் படிக்கசுதந்திரநாளினை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி
சுதந்திரநாளினை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி இலங்கையின் 78ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி 04.02.2026இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகமகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் இடம்பெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளாநொச்சி கந்தசுவாமிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.இவ்வார்ப்பட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோசங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப்பிரச்சிற்கான தீர்வை வலியுத்தியும், தமிழர்தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளை தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத்…
மேலும் படிக்கபல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு
வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை; பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே 04.02.2026நாளையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகமாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்னும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவு நல்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அழைப்புவிடுத்துள்ளார். குறித்த “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கும்வகையில் ஊடகங்களுக்கு 03.02.2026இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும்…
மேலும் படிக்கஇலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினமே.இயக்குநர் வ.கௌதமன்!
இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினமே – தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன்! இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமட்ட ஒரு கறுப்பு தினம் எனவும், சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கறுப்பு தின போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுதந்திரம் பெற்ற இலங்கை தேசம் வேண்டும் என்ற அடிப்படையில் உறுதியாகவும், உக்கிரமாகவும் போராடிய பங்கு தமிழர்களுக்கும் உண்டு. இந்திய ஒன்றியத்திலும், இலங்கையிலும் தமிழ் தலைவர்களின் போராட்டமும் சுதந்திரத்துக்கு காரணமாக அமைந்தது. அந்தவகையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பொன்.அருணாசலம், பொன்.இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், ஈ.எம்.வி.நாகநாதன்…
மேலும் படிக்கசுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சிறிதரன்
போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் நாளையதினம் முன்னெடுக்கும் போராட்டமானது மிகவும் பெறுமதியானயானது.நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் எமக்கு இந்த நாட்டில் சமஷ்டி முறையிலாக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள் 07 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்க்கப்படவில்லை.எனவே சுதந்திர தினத்தன்று இடம்பெறும் கரிநாளுக்கு வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்ககிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு
கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்)வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று 02.02.2026இன்று இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற…
மேலும் படிக்கசுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு –
சுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டம் சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01), இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இதற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர்.
மேலும் படிக்கஇலங்கையின் சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் :
எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் இதனைக் குறிப்பிட்டார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போராட்டமானது சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.…
மேலும் படிக்ககேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம் 𑁍 ஒரு புரட்சிகர மனதின் அறிவுசார், அறம்சார் மற்றும் வரலாற்று வாசிப்பு
கேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம் 𑁍 ஒரு புரட்சிகர மனதின் அறிவுசார், அறம்சார் மற்றும் வரலாற்று வாசிப்பு ✦ அறிமுகம் : காலத்தைக் கடந்த ஒரு கடிதம் 1991 அக்டோபர் 21 அன்று, கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) அவர்கள் ஜெனீவா நகரிலிருந்து தனது மனைவி டாலி அவர்களுக்கு ஒரு மிகுந்த தனிப்பட்ட கடிதத்தை எழுதினார். முதற்பார்வையில் இது ஒரு தம்பதியரின் தனிப்பட்ட உரையாடலாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அது ஒரு தத்துவ அறிக்கையாகவும், ஒரு அரசியல் சாட்சியமாகவும், மேலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அறவழி வழிகாட்டியாகவும் விரிவடைகிறது. முப்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்தபின், 2026 ஜனவரி 16 அன்று, இந்தக் கடிதம் வெறும் நினைவாக மட்டுமல்ல; ஒரு வரலாற்று ஆவணமாக உயர்ந்து நிற்கிறது. புலம்பெயர்ந்த வாழ்வின் உணர்வுப்பூர்வமான வலி,…
மேலும் படிக்க