குமுதினி படகு படுகொலையின் 40-ஆம் ஆண்டு நினைவு நாள்
1985ஆம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் திகதி குமுதினிப் படகு வழமைபோல தனது சேவையை ஆரம்பித்தது. அன்று ஏறக்குறைய அப்படகில் அறுபதிற்கும் மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்தார்கள். நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமயம் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ள நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினரின் இரண்டு பீரங்கிகள் பொறுத்தப்பட்ட விசைப்படகுகள் குமுதினிப் படகினை அண்மித்த போது அதில் பயணித்த மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். அவ்விரண்டு விசைப்படகுகளில் கடற்படையினர் தங்களுடன் கோடரி, கத்தி, அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களையும் எடுத்து வந்திருந்தனர். இதைப் பார்த்த மக்கள் செய்வதறியாது கதறி அழுதார்கள். வந்த கடற்படையினர் குமுதினிப் படகினுள் மூன்று மாதக் குழந்தை உட்பட அனைத்துப் பயணிகளையும் ஒவ்வொருவராகக் கீழ்த்தளத்திற்கு அழைத்து மற்றவர்கள் அறியாமல் தாங்கள் எடுத்து வந்த கூரிய ஆயதங்களினால் வெட்டிக் கொன்றனர். கடற்படையின் இத்…
மேலும் படிக்க