அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பெக்கோ இயந்திரம் மோதியதில் அரச பேருந்து விபத்து – 10 பேர் வைத்திய சாலையில்!

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி வீதியைக் குறுக்கறுத்துச் சென்ற பெக்கோ இயந்திரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தில் பேருந்து முற்றாக சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான ரயில் சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஆசன முன்பதிவுகள் கடந்த 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் ஆர்வத்துடன்  தமக்கான பதிவுகளை மேற்கொள்வதை காணமுடிகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் நேற்று பிற்பகல் எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து மக்கள் எரிபொருளை சேகரிக்க முண்டியடித்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தியே இயந்திர பிரச்சினைக் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஊர்தியில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாவும் ஊர்தி வீதியில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த இடத்திற்கு கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் விரைந்த பிரதேச வாசிகள், வீதியில் வழிந்தோடிய எரிபொருளைச் சேகரிப்பதில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் தீப்பரவல் ஏதேனும் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்காலிக லாபத்திற்காக குறித்த மக்கள் உயிரை ஆபத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் டீசல் விலை அதிகரிப்பு.

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கமைய, எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 590 ரூபாய் லங்கா சூப்பர் டீசல் (LSD) – 600 ரூபாய் எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 620 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லாஃப்ஸ் எரிவாயுவை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 7,000 மெற்றிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தது. குறித்த எரிவாயு கையிருப்பினை லாஃப்ஸ் நுகர்வோருக்கு இன்று முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அஸ்வெசும கொடுப் பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப் பட்டுள்ள தாக ஜனாதிபதி!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும்  தற்போதைய உலகப் போர்ச் சூழலினால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். இதன்போது எரிபொருள் மற்றும் வலுசக்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எரிபொருள் செலவினங்களுக்கு ஏற்ப விலைகளைத் திருத்தியமைக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தைப் பெறுமதிக்கு இணங்க, தற்போது ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கடுத்த தினமொன்றில் எரிபொருளுக்கான புதிய செலவு…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும், நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்காக 150,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த மானியத் திட்டம் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு மிக விரைவில் எரிபொருள்.

ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவுடன் அரசியல் ரீதியான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேர்காணலில் ஒன்றில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.எரிபொருள் விநியோகம் தொடர்பாக அரசியல் ரீதியான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எண்ணெய் விநியோகம் ஆரம்பிக்கப்படும்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

150 அடி பள்ளத்தில் விழுந்து டிப்பர் ரக பாரஊர்தி விபத்து!

மஸ்கெலியா மின்னா பாதை ஊடாக சென்ற டிப்பர் ரக பாரஊர்தி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.சாமி மலை நகரில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக பாரஊர்தி, வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பித்துள்ளார்.எனினும் பக்கத்தில் அமர்ந்திருந்த நபருக்கு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.இந்த வீதி கடந்த முப்பது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பாரிய அளவிலான குன்றும் குழியுமாக காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

தேசிய QR கொடுப் பனவு ஊக்குவிப்புத் திட்டம்”உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப் படவுள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரூ. 5,000 வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை (Merchant Discount Rate) முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது இலங்கையில் மிகவும் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு காணப்படுவதுடன், நாட்டின் வயதுவந்த மக்களில் 89% பேருக்கு வங்கி வசதிகள் உள்ளன.…

மேலும் படிக்க