செய்திகள் தாயகச் செய்தி 

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட் டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

திருகோணமலை டச்சு பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவி கட்டுமான பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்கள் இன்று (09) காலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் அடங்கலாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தின் அனுமதி இன்றி புத்தர் சிலை நிறுவப்பட்டு கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த திணைக்களம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

குடும்பிமலை பிரதேசத்தில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு.

சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர்கள் மட்டக்களப்பின் குடும்பிமலை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டதாக வாழைச்சேனை காவல்துறை.தெரிவித்தனர். இது தொடர்பாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குடும்பிமலை பிரதேசத்தில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் அண்மையில் இவை மீட்கப்பட்டதாகவும் இந்த ரொக்கட் லோஞ்சர்கள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை.தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணையை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை  காவல்துறை. மேலும் குறிப்பிட்டனர். இதனையடுத்து, இந்த ஆயுதங்கள் எவ்வாறு அந்தப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டன, யாரால் மற்றும் எந்த நோக்கில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டன என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படைகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சாணக்கி யனின் நியமனம்; கட்சிக்குள் புதிய சர்ச்சை.சீ.வி.கே. சிவஞானம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா. சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிய வருகிறது. கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா. சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் அறிவித்துள்ள போதும், இவரது நியமனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையென சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். இதிலிருந்து, இந்நியமனம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்விடயத்தில்கூட கருத்து ஒற்றுமைப்பட முடியாதுள்ள இக்கட்சி, இவ்விடயத்தில்கூட கருத்து ஒற்றுமைப்பட முடியாதுள்ள இக்கட்சி, எதிர்கால அரசியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வியையே மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தலைமைப் பதவிகளைச் சுற்றிய உள்முரண்பாடுகள் தொடருமாயின், அது கட்சியின் நம்பகத்தன்மையையும், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தனிநபர் ஆதிக்கங்களை விட கட்சியின்…

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை 

காலத்தை காத்தவர்கள் அல்ல — காலத்தை உருவாக்கியவர்கள்

காலத்தை காத்தவர்கள் அல்ல — காலத்தை உருவாக்கியவர்கள் ꧁‌━┅┉┈ ┈┉┅┅┉┈ ┈┉┅━꧂ காலம் வருமென கைகளை கட்டி காத்திருந்த பெண்கள் அல்ல இவர்கள், எமக்கான காலத்தை நாங்களே உருவாக்க களம் நோக்கி நடந்தவர்கள். அடக்குமுறையின் ஒவ்வொரு கட்டளைக்கும் தலைகுனிய மறுத்து, ஒவ்வொரு “ஆணைக்கும்” எதிராக ஒரு வரலாற்று “இல்லை” என நெஞ்சம் நிறுத்தியவர்கள். அடுப்படிக்குள் அடக்க சமூகம் திட்டமிட்டபோது, அக்னியாக மாறி அரசியல் மேடையே அதிர வைத்தவர்கள். “பெண் என்றால் பொறுமை தான் அடையாளம்” என்ற பொய்யை, இரத்தம் சிந்தி, உண்மையால் சிதைத்தவர்கள். அவர்கள் காலடி மண்ணில் பதிந்ததல்ல— ஆக்கிரமிப்பின் மார்பில் பதிக்கப்பட்ட தீர்ப்புகள். பயம் அவர்களை தொடர வந்தபோது, அவர்கள் பயத்தையே பின்னால் இழுத்துச் சென்றார்கள். போராட்டம் ஆண்களின் சொத்து அல்ல என்று வரலாற்றின் முகத்தில் உச்சரித்த பெண்கள் இவர்கள். மரணம் கூட அவர்களை மௌனப்படுத்த…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

பவுன்ஸ் பேக் கடன் மோசடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பிரித்தானிய காவல்துறை

பவுன்ஸ் பேக் கடன் மோசடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பிரித்தானிய காவல்துறை ⧉════════❁════════⧉ தேசிய நெருக்கடியை தனிநல லாபமாக மாற்றியவர்களிடமிருந்து பெருந்தொற்று நிவாரண நிதியை மீட்டெடுக்க அரசாங்கம் உறுதி 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், COVID-19 பெருந்தொற்றுக் காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு வணிகங்களைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட Bounce Back Loan (BBL) திட்டத்தில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக, பிரித்தானிய அரசாங்கமும் சட்ட அமலாக்க அமைப்புகளும் நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகளை கணிசமாக தீவிரப்படுத்தியுள்ளன. தனிப்பட்ட லாபத்திற்காக இந்தத் திட்டத்தை திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்திய நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்து, அவர்கள்மீது வழக்குத் தொடரும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம், வரி செலுத்தும் மக்களின் பணத்தை மீட்டெடுப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு மீண்டும் வெளிப்படுகிறது. ✦.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சுகாதார சீர்கேட்டுடன் வவுனியா நகரில் இயங்கிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளது

சுகாதார சீர்கேட்டுடன் வவுனியா நகரில்  இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள், பழைய பஸ் நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல உணவகங்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் விவசாயிகள் அவதி – ரவிகரன் சுட்டிக்காட்டு

முல்லையில் களஞ்சியசாலைகளை நிறைத்துள்ள 304மெற்றிக் தொன் நெல்; நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் விவசாயிகள் அவதி – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை நெருக்கடியினாலேயே நெல்சந்தைப்படுத்தல்சபையினால் நெற்கொள்வனவு தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபை 2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவுசெய்யப்பட்ட நெல்லினை உரியவகையில் களஞ்சியசாலைகளில் இருந்து அகற்றியிருந்தால் தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருக்காதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தற்போது அரசால் நெற்கொள்வனவிற்கென நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளபோதும் நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினாலேயே நெற்கொள்வனவில் தாமதம் ஏற்பட்டு விவசாயிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் 06.02.2026இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ மனு தாக்கல்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது.அதன் பின்னர் இந்தத் தடை இந்தியாவால் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தடையானது நீடிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை U.A.P.A தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 இல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி மேன்முறையீடு ஒன்றை செய்திருந்தார்.இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ். மானிப்பாய் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அந்த இரு நபர்களும் கைது கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வான்பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர் அவர் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.குறித்த பயணியின் பயணப் பையின் ரகசியப் பகுதியில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் டிப்பர் வாகனம் விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், ஒலுவில் பிரதேசத்தில் இன்று (06) காலை 8.00 மணியளவில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது வாகனத்தில் இருந்த ஏராளமான நெல் மூட்டைகள் வீதியோரத்தில் சிதறின. எனினும், வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதால், சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார்…

மேலும் படிக்க