உலக அரசியல். கட்டுரை 

உடையும் உலக ஒழுங்கு உக்ரைன் மேல்தட்டு வர்க்கத்தின் பீதி,

உடையும் உலக ஒழுங்கு உக்ரைன் மேல்தட்டு வர்க்கத்தின் பீதி, பிரிக்ஸ் (BRICS) நிதிப் புரட்சி மற்றும் ஐரோப்பாவின் வியூகத் தற்கொலை ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ கீவ் மீது விழும் நிழல்கள்: உக்ரைன் மேல்தட்டு வர்க்கத்தின் வெளியேற்றம் உக்ரைனின் அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதார மேல்தட்டு வர்க்கங்களுக்குள் பீதி வேகமாகப் பரவி வருகிறது எனக் கூறி, ரஷ்யாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான SVR ஒரு திட்டமிட்ட உளவியல்–தகவல் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.மாஸ்கோவின் கூற்றுப்படி, போர் முடிவுக்குப் பிந்தைய அரசியல் வீழ்ச்சியை முன்கூட்டியே கணித்து, உக்ரைனிய அரச இயந்திரம் ரகசியமாகத் தயாராகி வருகிறது.இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை: • உயர் அரசியல் அதிகாரிகளும், பெரும் செல்வந்தர்களுடன் தொடர்புடைய வணிகத் தலைவர்களும் தங்கள் குடும்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. • வெளிநாட்டு வங்கிகளுக்குப் பாரிய அளவிலான மூலதன மாற்றங்கள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

டக்ளஸ் தேவானந்தா CID இனால் அதிரடி கைது!

டக்ளஸ் தேவானந்தா CID இனால் அதிரடி கைது!- கைத்துப்பாக்கி விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அத்திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (26) கைது செய்யப்பட்டதாக,  காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவத்தினால் அவருக்குத் தற்காப்புக்காகச் சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக கைத் துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மாகந்துரே…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஆழிப்பேரலை 21ஆம்ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்தது கள்ளப்பாடு

ஆழிப்பேரலை 21ஆம்ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்தது கள்ளப்பாடு கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் முல்லைத்தீவு – கள்ளப்பாட்டைச் சேர்ந்த பொருந்திரளான மக்கள் உயிரிழந்தனர். இந் நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.12.2025இன்று கள்ளப்படு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் ஈகைச்சுடர் மற்றும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஆழிப்பேரலையின்போது உயிரிழந்த உறவுகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர். மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி.இராஜஜோகினி ஜெயக்குமார், ஒட்டுசுட்டான் பிரதேச காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கிராம உத்தியோகத்தர்கள்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி 

ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; முல்லை சுனாமி நினைவாலயத்தில் முன்னெடுப்பு

ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; முல்லை சுனாமி நினைவாலயத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2025இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர். அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் அளித்த அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கண்டித்துள்ளன. ‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்ததை பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மோல்டா, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் கண்டிப்பதாக’ அந்நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு இணைப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளின் விரிவாக்கத்தையும் தெளிவாக எதிர்க்கிறோம் என்பதை நாம் நினைவுகூர்கிறோம்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய குடியேற்றங்கள் தொடர்பிலான அறிவிப்பை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சரான பெசலல் ஸ்மொட்ரிச் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தார். பலஸ்தீன நாடு ஒன்று உருவாவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

ஒன்றிய அரசே! இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாத அராஜகத்தை வேடிக்கைப் பார்க்காதே! வேல்முருகன்

ஒன்றிய அரசே! இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாத அராஜகத்தை வேடிக்கைப் பார்க்காதே! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  இந்தியப் பெருநிலத்தில் வாழும் எட்டு கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக நடவடிக்கை எடு!தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களைத் திட்டமிட்டு அபகரித்து,புத்த பிக்குகள் மூலமாகத் தமிழர் பகுதிகளில் புத்த விகாரைகள் அமைக்கும் இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாதத் தமிழர் விரோத அரசியல் போக்கைத்தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சொந்த நிலத்தையும்,சொந்த வீட்டையும்,தாம் வழிபட்ட ஆலயத்தையும் காக்கும் நோக்கில் போராடிய, அப்பாவித் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிக் கைது செய்து சிறையில் அடைக்கும் இலங்கை அரசு, அதே நேரத்தில் தமிழர் நில அபகரிப்பில் முன்னின்று செயல்பட்ட பிக்குவுக்கு, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து விருது வழங்கி விழா நடத்துவது இலங்கையில் நிலவும் “ஜனநாயகத்தின் மீதானத்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முன்னாள் போராளி வைதேகி நேற்றைய தினம் 23.12.2025 சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணியில் தேசவிடுதலைக்காக பல களங்கள் பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்த மகளிர் போராளி வைதேகி 23.12.2025 இன்று சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்.அவருக்கு எமது இறுதிவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விசேட கவனம் அமைச்சர் ஆனந்த விஜேபால

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அம்மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாகவும் நிவாரணப்பணிகள் தொடர்பாகவும் குளங்கள், வீதிகள் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் மேலும் இரு பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

முடக்கப்பட்டு வரும் உதவிகள் குறித்து ஐ.நா. கவலை   காசாவில் தொடர்ந்து போர் நிறுத்த மீறலில் ஈடுபடும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அங்கு மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பல இடங்களிலும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. காசா நகரின் கிழக்கு மற்றும் துபா பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று (23) குண்டுகளை வீசியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு காசாவின் கான் யூனிஸின் கிழக்கு பகுதி மற்றும் டெயிர் அல் பலாஹ்விலும் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.   போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தீவிரமாகவும் திட்டமிட்ட வகையிலும் மீறுவதாக கண்டித்த காசா அரச ஊடக அலுவலகம், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் அதனை இஸ்ரேல் 875 தடவைகள் மீறி இருப்பதாக சுட்டிக்காட்டியது.…

மேலும் படிக்க