தாயகச் செய்தி 

சிலாபம் கடல் பகுதியில் கடற்படையினர் கைப்பற்றிய பீடி இலைகள்

சிறப்பு தேடுதல் நடவடிக்கை கடந்த புதன்கிழமை (10), சிலாபம் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் செயல்படுத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1740 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன. மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.   சட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்த கட்டம் கைப்பற்றிய பீடி இலைகள் தற்போது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாட்டின் சட்டங்களை மீறுபவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் நடைபெறுவதற்காக, பீடி இலைகளின் உரிமையாளர்கள் கண்டறியப்படும் மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்து.

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் சில பாடங்கள் இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் சில பாடங்கள் இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் பத்தாம் திகதி ஆரம்பமாகின. டிசம்பர் முதலாம் திகதி இப்பரீட்சைகள் முடிவடையவிருந்தன.இநநிலையில்,திடீரென இயற்கை அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க நேர்ந்ததால்,சில பாடங்களுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.இதன் பிரகாரம் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சையை ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்துள்ளது.இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீடு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

நிவாரண நிதியத்துக்கு ரூ. 3,421மில்லியன் இதுவரை நிதி உதவி.

நாட்டை கட்டியெழுப்பும் நிவாரண நிதியத்துக்கு ரூ. 3,421மில்லியன் இதுவரை நிதி உதவி வாரண நிதியத்துக்குஇதுவரை ரூ. 3,421 மில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த துறைகள் மற்றும் மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பொருட்டு இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளதாவது; உள்ளூர் வர்த்தகத் தலைவர்கள்,வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த உதவிகளை வழங்கியுள்ளன. இதன்பிரகாரம் இந்நிதியத்துக்கு இதுவரை 3,421மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.இது 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.வெளிநாட்டு நாணயங்களாக 4.1 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.நாற்பது நாடுகளிலிருந்து நிதி உதவி பெறப்பட்டுள்ளதாகவும், அதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க