இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று பெருமளவிலான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன இன்றைய நாள் (03 03 2026): மொத்தம் 57 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 28 விமானங்கள்  மற்றும் இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன  (04 03 2026): நாளை புதன்கிழமை திட்டமிடப்பட்டிருந்த 04 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன மத்திய கிழக்கு நாடுகளுக்கான மற்றும் அந்தப் பிராந்தியத்தினூடாகப் பயணிக்கும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்கவெல்ல இது குறித்துக் கூறுகையில்: பாதுகாப்பு கருதி இந்தத் தற்காலிக ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒரு சில விமானங்கள் மட்டும் அந்தப் பிராந்தியத்தினூடாகப் பயணித்துள்ளன.

Leave a Comment