குடமுருட்டி பாலத்திற் கருகில் தடண்புரண்டு விபத்துக் குள்ளான பாரவூர்தி ;
கிளிநொச்சி – குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பாரவூர்தி ஒன்று தடண்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளனது.
குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகின்றது. விபத்தின் போது கொள்கலனில் இருந்த பெருமளவு டீசல் கசிந்து வெளியேறி விரயமாகியுள்ளது. இந்த விபத்தினால், குறித்த டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதையடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.