தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் உலக சுற்றாடல் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும்!

வடக்கு மாகாண விவசாய அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஶ்ரீ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக வவுனியா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் அ.அற்புதராஜா கலந்துகொண்டார்.முன்னதாக வவுனியா நகரசபை வாயிலில் இருந்து விருந்தினர்கள் ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து கலைநிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வடக்கில் முன்மாதிரியாக மாறிய சாரதி, நடத்துநர் – நேர்மைக்கு கௌரவிப்பு

பயணி ஒருவர் தவறிவிட்டுச் சென்ற பெறுமதியான நகை மற்றும் பணத்தை, நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்குப் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினல் பாராட்டுக்களும் கெளரவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. ​ கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், தனது பெறுமதியான நகை மற்றும் பணப்பையைத் தவறுதலாகப் பேருந்திலேயே விட்டுச் சென்றுள்ளார். இதனை அவதானித்த குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரான மகேந்திரன் கோகுலதீபன் மற்றும் L. ஜனார்த்தனன் ஆகியோர், அந்தப் பொருட்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு, உடனடியாக அவரிடம் ஒப்படைத்தனர். ​இவர்களின் இந்த உன்னதமான மனிதாபிமானச் செயற்பாட்டைக் கௌரவிக்கும் வகையில், வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பொறியளாலர் விமலேஸ்வரன் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. ​வடமாகாண பயணிகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

காருக்குள் மருத்துவர் சடலம்; காதலனும் மனைவியும் யாழில் கைது!

கண்டி –  தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதியினர் நேற்று (23) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டதாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதேவேளை கடந்த ஜூன் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், சந்தேகநபர் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பொலிஸாரின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கேப்பாபிலவு பூர்வீக மக்கள் ஆளுநரிடம் அவசர கோரிக்கை;

கேப்பாபுலவு பூர்வீக மக்கள் தங்களின் வாழ்விட உரிமை தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். கடிதத்தில், கடந்த 16 ஆண்டுகளாக தங்களின் பூர்வீக வாழ்விட உரிமையை நீதியான மற்றும் உண்மைத் தரவுகளின் அடிப்படையில் கோரி வருவதாகவும், அதற்கு மாறாக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் அநீதியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி 04.06.2026 அன்று மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசித்து பதில் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அதன்படி 14.06.2026 அன்று பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அன்றைய முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக இருந்தவர் தற்போதைய வட மாகாண ஆளுநராகவும் இருக்கின்றார். மக்களின் உண்மை நிலை, நலன்புரி நிலையங்களிலிருந்து அவர்கள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி சாத்தியமில்லை; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி சாத்தியமில்லை; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு தமிழ்மக்கள் மனிதப் புதைகுழிகளுக்கான நீதியை கோருவதுடன், தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி பேன்றவற்றிற்காகவும் தொடர்ந்து போராடிவருகின்றார்கள் எனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவற்றுக்கு விடையில்லாத வரை நல்லிணக்கம் எப்படி மலரும் எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி என்பது சாத்தியமில்லை எனவுஞ் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு ஒட்டுமொத்த தீவிற்கும் பௌத்த சிங்கள முலாம் பூசுவதாலோ, வரி அறவீடுகளைச் செய்வதாலோ நாடு அபிவிருத்தி அடையாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்தத் தீவின் பல்வகைமையை கண்ணியப்படுத்துவதுடன், இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் திணைக்களங்களை தூய்மைப்படுத்துமாறும், உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 23.06.2026இன்று உரைமாற்றும்போதே…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு.

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் முல்லைத்தீவு – இத்திமடு கிராமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு குமுளமுனையை சேர்ந்த சர்விதன் என்ற இளைஞரே இவ்வாறு  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர் ஒருவர் வயல் காவலுக்கு இத்திமடு கிராமத்தில் உள்ள வயல்பகுதிக்கு நேற்றையதினம் (23) இரவு  சென்றார். இந்த நிலையில்  இன்று அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டுயானை இளைஞனை தாக்கியதில்  குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஆசிரியர் பரீட்சையில் அநீதி; பட்டதாரிகள் நாம் தெருவில் – யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்ப்புப் போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே  இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அதனால்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன் படுத்தப்பட வேண்டும் ஆளுநர் நா.வேதநாயகன் 

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என நான் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளேன். இன்று கரும்பு மீள்நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது, எமது வளங்களை நாம் உரிய வகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது, என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ‘கரும்புத்தோட்டம்’ பகுதியில் பல தசாப்தங்களின் பின்னர் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (23.06.2026) செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. ‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின் கீழ், விவசாயிகள், கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், கரும்புச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் ‘நேச்சுரல் ரூட்ஸ்’ (Natural Roots) நிறுவனம் ஆகியவை இணைந்து கூட்டாக இதனை ஏற்பாடு செய்திருந்தன. பல தசாப்தங்களாகக் கைவிடப்பட்டிருந்த கரும்புச் செய்கையை இப்பிரதேசத்தில் மீளவும் செழிக்கச் செய்யும் நோக்கில் இந்த ஆரம்ப நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பதவிநிலை சமாதான நீதிவான்களாகச் சத்தியப் பிரமாணம்!

வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள், பதவிநிலை சமாதான நீதிவான்களாக இன்றையதினம் (23) உத்தியோகபூர்வமாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஊர்காவற்றுறை நீதிமன்றக் கட்டடத்தில், ஊர்காவற்றுறை நீதவான் கௌரவ அனீபா ரஜீவ் முன்னிலையில் இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, நீதவான் முன்னிலையில் தத்தமது பதவிகளுக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டு அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டனர். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கான சான்றுப்படுத்தல்கள், அவசர தேவைகள் மற்றும் பிரதேச மட்டத்திலான மக்கள் நலச் சேவைகளை இன்னும் விரிவாகவும், சட்டபூர்வ அதிகாரத்துடனும் முன்னெடுப்பதற்கு இந்த நியமனம் தங்களுக்குப் உறுதுணையாக அமையும் எனச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சபை உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி, ஏ – 9 பிரதான வீதியில் கோர வீதி விபத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பலி!

கிளிநொச்சி, ஏ – 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள மஞ்சள் கோட்டு பாதசாரி கடவையில் அவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மிகக் கொடூரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவருக்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி…

மேலும் படிக்க