இலங்கை செய்தி. செய்திகள் 

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு,!

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் பணியாற்றியுள்ளார்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; நெல் உலர்த்திகளின் நிலை தொடர்பில் கேட்டறிந்தார்.

முல்லை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; நெல் உலர்த்திகளின் நிலை தொடர்பில் கேட்டறிந்தார். முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்திகளின் நிலைதொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இச்சந்திப்பானது முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள ஒரு நெல் உலர்த்தியும், பனங்காம்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்தியுமே பயன்பாட்டில் இருப்பதாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள மற்றுமொரு நெல் உலர்த்தியும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் குமுழமுனையிலுள்ள நெல் உலர்த்தியும், துணுக்காய் பலநோக்கு…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி;

வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; வீதிச் சீரமைப்புக்கள் குறித்து கலந்துரையாடல் முல்லைத்தீவுமாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 23.02.2026நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வீதிஅபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய சீரின்றிக் காணப்படும் வீதிகளின் சீரமைப்பு மற்றும் வய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்…!

பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்…! கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அண்மையில் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். ​குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். ​இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 34 காற்றாலைகளில், சுமார் 9 காற்றாலைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலும், செழிப்பான தென்னந்தோப்புக் காணிகளிலும் அமைக்கப்படவுள்ளன. இதனால் சுமார் 2,500க்கும் மேற்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து;

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து; வெள்ளியன்று நிலமைகளைப் பார்வையிட நேரில் வருகிறார் – கமநல உதவி ஆணையாளர் முல்லைத்தீவு – செம்மலை பெரியகுளத்தின் கட்டைச் சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், செம்மலை கிழக்கு பகுதியிலுள்ள புளியமுனையில் யானைவேலி அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல உதவி ஆணையாளரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைவிடுத்தது, குறித்த இடங்களுக்கு நேரில் வருகைதந்து பார்வையிடுமாறும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், எதிர்வரும் 27.02.2026 வெள்ளிக்கிழமையன்று குறித்த பகுதிக்கு நேரடியாக வருகைதந்து நிலமைகளைப் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 22.02.2026அன்று செம்மலைப் பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியதுடன்,…

மேலும் படிக்க
செய்திகள் தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்தியாவின் விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் நடந்த விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.ரெட்பேர்ட் ஏர்வேஸுக்குச் சொந்தமான விமான ஆம்புலன்ஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நேற்று (23) இரவு 7:11 மணிக்கு ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புது டில்லிக்கு புறப்பட்ட விமானம், இரவு 7:30 மணியளவில் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது.அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், விபத்தானது, இடியுடன் கூடிய மழை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்களில், இரண்டு பணியாளர்களும் ஒரு நோயாளியும் அவரது உறவினர்களும் அடங்குவதாக மேலும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு

சாவகச்சேரியின் நகரசபையின் பொண் விழா மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆரம்பமானது இவ் மாநாட்டின் ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மக்கள விளக்கு ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழ் தாய் பாட்டு பாடப்பட்டதுடன் இவ் மாநாட்டில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது இவ் பேராளர் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள், கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு

இலங்கை வனஜீவராசிகள் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி பதக்கங்கள் வழங்கும் கௌரவிப்பு நிகழ்வு முதன்முறையாக நடைபெற்றது. கிரிதலே தேசிய வனஜீவராசிகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தலைமையில் இடம்பெற்றது. நாட்டின் வனப்பகுதிகளையும், வனவிலங்குச் சம்பத்துக்களையும் தமது உயிரைப் பணையம் வைத்துப் பாதுகாக்கும் அதிகாரிகளை ஊக்குவிப்பதையும், அவர்களைப் பாராட்டுவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சேவைக்காலம் மற்றும் வனஜீவராசிகள் தொடர்பான களக் கல்வித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 அதிகாரிகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, தத்துவார்த்த அறிவு, களத்திறன், ஒழுக்கம் மற்றும் விசேட நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய உத்வேகம் ஆகியவை இந்தப் பதக்க வழங்கலில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.வனஜீவராசிகள் திணைக்களத்தின் வினைத்திறனை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

புளியம்பொக்கணை ஆலய வருடாந்த ஆலோசனைக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி, 01.04.2026 அன்று பிரதான பொங்கல் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. இப் பொங்கல் உற்சவத்தினை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு முக்கிய ஆலோசனைக் கூட்டம் ​கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் 20.02.2026 நேற்றையதினம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்வரும் உற்சவ காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ​பக்தர்களுக்கான போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது பற்றியும்,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ் கலிகைச் சந்தியில் வைத்து 15.02.2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் ஈபிடிபியினருடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை (21.02.2026) சற்றுமுன் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் மதிவாணன் கைகளும், கால்களும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, இரத்தக் கறை படிந்திருப்பது போன்ற ஆடை அமைப்புடன்ன நீதி கோரிய காட்சி காண்பவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது. இதன்போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் குரல் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க