சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடு களுக்கு காவல் துறையே காரணம். ரவிகரன் எம்.பி

ஒட்டுசுட்டானில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு காவல்துறையே காரணம் ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; புலிகள் சட்டம் ஒழுங்கினை பாதுகாத்தனரெனவும் சுட்டிக்காட்டு ஒட்டுசுட்டானில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு  காவல்துறையே ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; புலிகள் சட்டம் ஒழுங்கினை பாதுகாத்தனரெனவும் சுட்டிக்காட்டு முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு காவல்துறையே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கினைப் பாதுகாத்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.07.2025இன்று இடம்பெற்றது. இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுச்செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற முன்மொழிவொன்றை ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் அபிவிருத்திக்குழுவில் முன்வைத்தார். இதன்போது கருத்துத்தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வின் போது 40 மனித எச்சங்கள்

செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வின் போது 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டம் இன்று எட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜா அவர்களின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு அகழ்வு இன்று நடைபெற்றது. இதுவரை 34 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, 6 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வெலிஓயா, பெரும் பான்மை இனத்தவர் களுக்கு இறங்குதுறை வழங்க முடியாது – ரவிகரன் எம்.பி;

வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் எம்.பி; அபகரித்துள்ள தமிழர்களது காணிகளை மீள ஒப்படைத்துவிட்டு வெளியேறுமாறும் எச்சரித்தார். வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணிகளை, மீளவும் தமிழ் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு பெரும்பான்மை இனத்தவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டுமெனவும் எச்சரித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 25.06.2025நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் கடற்றொழில்மேற்கொள்வதற்கு நாயாறுப்பகுதியில் இறங்குதுறை வழங்குமாறு அனுமதி கோரியிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய்தொடக்கம்,…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

போராட்ட இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சீ.வி.கே. சிவஞானம்;

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் (25) மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பகல் வேளையில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி வெளியேற்றியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். எனவே , அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள…

மேலும் படிக்க
உலக செய்திகள் சிறப்புச் செய்தி 

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் 6 ஏவுகணைகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணைகள் வீசப்பட்ட சிறிது நேரத்திலேயே கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்களை தெரிவிக்கின்றனர். பாதிப்பு அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அரசும் கத்தாரில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன. மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பண்டிதர் பரந்தாமன் அவர்கள் மறைவு

ஈழத்து பண்டிதர்,  பாடலாசிரியர் வீ.பரந்தாமன் அவர்கள் நேற்றைய தினம் காலமானார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்’ என்ற பாடலில் தொடங்கி பல்வேறு பாடல்களை எழுதியதுடன் மட்டுமின்றி ஈழப் போராட்டக்களத்தில் பல்வேறு பங்காற்றியவர்.இந்நிலையில் இவர் இன்று பருத்தித்துறை புலோலியில் இயற்கை எய்தியுள்ளார். அவரது இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தையிட்டியில் பெருமளவான காவல்துறை குவிப்பு

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்று (10) 2ஆம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர், தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி நேற்று (09) மாலை முதல் , காணி உரிமையாளர்கள் , மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் மாலை வரையில் நடைபெறவுள்ளது இந்நிலையில் விகாரைக்கு தெற்கில் இருந்து பெருமளவான சிங்கள மக்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வவுனியா இறம்பைக் குளம் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும்  மீட்பு

 இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும்  மீட்பு வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்கப்பட்டன.   வீட்டின் உரிமையாளரினால் கழிவு தொட்டி ஒன்று அமைப்பதற்காக வீட்டின் பாவனையற்ற வாயில் முன்பாக குழி ஒன்றினை ஜெ.சி.பி உதவியுடன் இன்று (08.06.2025) காலை வீட்டின் உரிமையாளர் தோண்டியுள்ளார். இதன் போது அக் குழியினுள் துப்பாக்கி மற்றும் ரவைகள் காணப்பட்டதனையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல்  வழங்கியிருந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை மற்றும் தடவியல் பிரிவு  காவல் துறை ஆகியோர் வீட்டின் உரிமையாளர் மற்றும் வேலையாட்களிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் குழியினுள் ஒர் பையில் போடப்பட்டு உரைப்பையினுள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட துப்பாக்கி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வவுனியாவில் இரத்தக் கறைகளுடன் இளைஞர் சடலம் மீட்பு!

வவுனியாவில் இரத்தக் கறைகளுடன் இளைஞர் சடலம் மீட்பு! வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை காவல்துறை இன்று (04) மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற  காவல்துறை சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்று (03) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்.பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப் பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவிற்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த அருட்கலாநிதி தாவீது அடிகளாருக்கும் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தலில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் நூலக ஊழியர்கள், வாசகர்கள் ,பொதுமக்கள்ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.யாழ்ப்பாண பொதுநூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி சிங்கள குழுவால் தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.  

மேலும் படிக்க