அண்மை செய்தி தாயகச் செய்தி 

பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி

யாழ். மாநகர சபையின் பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி யாழ். மாநகர சபையின் பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி – பொம்மைவெளி பகுதியில் சம்பவம்! யாழில் பவுசருடன் மோதிய மோட்டார் சைக்கிள். சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம் (20. 12. 2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் கழிவுப் பொருட்களை ஏற்ற வந்த தனியாருக்கு சொந்தமான பவுசர் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா…

மேலும் படிக்க
அண்மை செய்தி 

மகாவலி கங்கையின் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

மகாவலி கங்கை வடிநிலத்திற்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது மகாவலி கங்கை வடிநிலத்திற்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வௌ்ள அபாய முன் எச்சரிக்கை நாளை (20) மாலை 5.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி கங்கையின் சில நீரேந்து பகுதிகளில் பெய்த மழை மற்றும் மேல்ப் பகுதியிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறந்து விடப்பட்டமை காரணமாகச் சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நேற்று (18) அறிவிக்கப்பட்டிருந்தது. கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவை, திம்புலாகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு…

மேலும் படிக்க
அண்மை செய்தி 

எட்டு மாவட்டங்களில் டெங்கு அபாயங்கள்

நாட்டில், எட்டு மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை   நாட்டில், எட்டு மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுச்சூழல் மற்றும் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதில் காட்டப்படும் அசிரத்தையே இந்நிலைமைக்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார். எனவே, டெங்கு பரவலைக் குறைப்பதற்காக பொதுமக்கள் அதிகளவு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்,டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுத்தம் செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா,கண்டி,காலி,மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வாழைச்சேனையில் மண் அகழ்வை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை கிண்ணியடி பிரதேசத்தில் மீன் வளர்க்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்வை எதிர்த்து பிரதேச மக்கள் மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தை இன்று வியாழக்கிழமை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிசாருடன் பேசுவதற்கு சென்ற தமிழரசு கட்சி வேட்பாளர் உட்பட இருவரை கைது செய்ததயைடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், பொலிஸாரின் அடாவடியை எதிர்த்து சுட்டெரிக்கும் வெய்யிலில் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணியடி ஐஸ் உற்பத்தி நிலையத்துக்கு அருகாமையிலுள்ள தனியார் காணி ஒன்றில் 2021 ம் ஆண்டு மீன் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்ந்து வெளியிடங்களுக்கு எற்றிச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை கண்டித்து கடந்த காலத்தில் கிராமத்து இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களையடுத்து இத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் தாவடி ஆலயத்தில் யானை மிதித்து பெண்கள் காயம்

யாழ் தாவடி-ஆலயத்திற்கு கொண்டு வந்த யாணை மிதித்து பக்தர்களிற்கு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள ஆலயத்தில் நேற்றைய தினம் மஞ்ச உற்சவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தெற்கில் இருந்து யானை கொண்டு வரப்பட்டு மஞ்சத்தின் முன்பாக அழைத்து வரப்பட்டுள்ளது. மஞ்சம் முன்பாக தீப்பந்தங்களை எடுத்துச் சென்ற சமயம் யானை மிரண்டதில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஓர் பெண்ணின் கால் பாதம் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்தி மூன்று பேர் கைது

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்திமூன்று பேர் கைது இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து, 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன் இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (6) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய சந்தேகநபர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மின்னல் தாக்கியதில் முன்னாள் போராளி உயிரிழப்பு

இன்று 07/06/2025 புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மதியம் 2:00 மணி அளவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் 8ம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிப்பைச் சேர்ந்த அருமைநாயகம் .யசோதரன் [ வசக்கண்டு ] என்னும் முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார்

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

விடுதலைப்புலிகளுக்கு அகவை 49

புதிய தமிழ்ப் புலிகள் என்பது 1972 மே 22 ஆம் நாள் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தனது 17வது வயதில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பைத் தொடங்கினார் இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்ப்பதையும், தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட புரட்சிகர அமைப்பாகும் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் 1976 மே 5 ஆம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறைக்கு கொண்டுகொண்டு வரப்பட்டது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மன்னார்-யாழ் பிரதான வீதியில் பஸ் விபத்து; 

மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் நேற்று 03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பஸ் கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பஸ்ஸில் மோதி குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிலில் நின்ற நபரும் காயமடைந்ததுடன்,அவரது மோட்டார் சைக்கிலும் பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த விபத்தில் ஹென்டனர் ரக வாகனத்தின் சாரதி,உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது…

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் 

முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் செய்யப்படாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் செய்யப்படாதென அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. செபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் விலைகளை நேற்று நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும். 361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும். இதேவேளை 286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபாவாகும். அத்துடன், 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6…

மேலும் படிக்க