இலங்கை செய்தி. செய்திகள் 

புதிய அரசியலமைப்பு : சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கத்தினால்அநுரவிடம் முக்கிய கோரிக்கை!

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டின் போது அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. One Text Initiative அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கத்தினால், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி யுகத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ளல் அத்தியாவசியமான ஒரு முன்தேவை என்பதையும் தமது இயக்கம் உறுதியாக நம்புவதாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளல் இலங்கைக்கு ஒரு முக்கியமான சவால் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த முயற்சியில், அனைவரையும் உள்ளடக்கி, அனைவரினதும் பங்கேற்பை உறுதிசெய்யும் சீர்திருத்தச் செயல்முறையை உறுதி செய்வதும் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்புசார் கோட்பாடுகளின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

இன்றையதினம் (29) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை.

இன்றையதினம் (29) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் பதுளை, காலி, மாத்தறை, அநுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   கடல் பகுதிகளில் மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் மாத்தளை மாவட்ட ஆரம்ப நிகழ்வு, நேற்று (27) பிற்பகல் மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், சமூகத்தில் இழந்து வரும் அனைத்து தார்மீகப் பண்புகளையும் மீண்டும் கொண்டுவருவதற்காக நாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன்போது, கிராமங்களுக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு.

– உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக USD 5,000 எல்லையை கடந்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் தெளிவாகப் புலப்படுகிறது; இன்று கொழும்பு பெட்டா சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.🇱🇰 இலங்கை சந்தை நிலவரம் இன்றைய விலை (ஜனவரி 26, 2026): • 24 காரட் சவரன்: ரூ. 362,200 • 22 காரட் சவரன்: ரூ. 397,000 • விலை உயர்வு: ஒரு சவரனுக்கு சுமார் ரூ. 12,000 உயர்வு. • முன்னறிவிப்பு: பொருளாதார நிபுணர்கள் 2026 இறுதிக்குள் தங்க விலை USD 5,500 வரை செல்லக்கூடும் என கணிக்கின்றனர். செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை (23) ரூ. 385,000 ஆக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்றைய தினம் ரூ.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

கதிரியக்க தொழில்நுட்ப வியலாளர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேற்றையதினம் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரச்சினை தொடர்பில் நேற்றையதினம் இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் நபரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல் தொடர்பில் ஏற்கனவே உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஒரு வார காலத்திற்குள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை ஏற்படுத்தித் தருவதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வைத்தியசாலையின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 400 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது

பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.இதன்பிரகாரம் ,பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் 1750 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை என்பது பல வருடங்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் மூலம் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தது.பெருந்தோட்ட கம்பனிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்துக்கமைய, இம்மாதத்திலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை வௌியிட்டுள்ளது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த புதிய நாணயத்தாள்களின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களடங்கிய தகவல்களே மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளன. இத்தாளின் நம்பகத் தன்மையை எளிதாக அடையாளம் காண்பதற்கான அறிவுரைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த 2000 ரூபா நாணயத் தாளை வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால்,வாளினை கொண்ட சிங்கம் முழுமையாக தெளிவாக தெரியும், நிறம் மாறும். பாதுகாப்பு நூல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தினை காட்டுகிறது.இதிலிருந்து போலித்தாள்களை அடையாளம் காண முடியும். மேலும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

56ஆவது உலகப் பொருளாதார மகாநாட்டிற்கு. சுவிட்சர்லாந்து புறப்பட்டார் பிரதமர் ஹரிணி

சுவிட்சர்லாந்தின்(Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் இலங்கையிலிருந்து புறப்பட்டார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 23 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF): 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (19) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். “A Spirit of Dialogue” (உரையாடல் மனப்பாங்கு) எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் – 2026 கூட்டப்படவுள்ளது. இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000 இற்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர். இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நீர்கொழும்பு கடற்பரப்பில் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலை

நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான கப்பலொன்று நீர்கொழும்பு கடற்பரப்பில் நடாத்திய சுற்றிவளைப்பி்ன்போதே கடற்பரப்பில் கைவிடப்பட்ட பதினாறு (16) பொதிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக , புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது

அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது   திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை ஜனவரி 19 வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 16 ஆம் திகதி குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், இது கரையோர பாதுகாப்பு சட்டங்களுக்கு முரணானது எனவும் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, போதிராஜ விகாரை என தெரிவிக்கப்படும் குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்ற முயன்ற போது, புத்த பிக்குகள் உள்ளிட்ட சிறு குழுவினரால் எதிர்ப்பு எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

மேலும் படிக்க