இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வீடுகளில் எரிபொரு ளைச் சேமித்து வைப்பவர்க ளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

அனுமதியின்றி வீடுகளில் எரிபொருளைச் சேமித்து வைப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.அத்தோடு, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் மட்டுமே விநியோகத்தைக் கட்டுப்படுத்த QR (கியூ.ஆர்) முறைமை பயன்படுத்தப்படும் என அவர்குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், இந்த நேரத்தில் QR முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், எந்நேரமும் அதனை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இன்று (02) காலை 9:45 மணி வரை சுமார் 29 லட்சம் லீட்டர் டீசல் மற்றும் 29 லட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றும் சுமார் 69 லட்சம் லீட்டர் எரிபொருள் சந்தைக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து நீண்ட வரிசைகளில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் நடவடிக்கை

பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிலையங்கள் ஊடாகத் தடையின்றி டீசல் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் உருவாகியுள்ள எரிபொருள் வரிசை தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இத்தருணத்தில் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இப்போதே முறையான…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கொழும்பு துறைமுக நகரக் கடற் பரப்பிலிருந்து ஆணின் சடலம்

கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபர் கடந்த 28ம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரூ. 500 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் கைது

ரூ. 500 மில்லியனுக்கும் (ரூ. 50 கோடி) அதிகமான தெரு மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) பிற்பகல் அஹுங்கல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, 3 வெவ்வேறு சுற்றிவளைப்புகளில், பலபிட்டிய மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 13.032 கி.கி. ஐஸ் மற்றும் 14.112 கி.கி. ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார். இவர்களில் கைது செய்யப்பட்ட 41 வயதான, அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து 9 மி.மீ. பிஸ்டல் வகை கைத்துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும், 3.8 மி.மீ, வகை துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்..கைதான இரு சந்தேகநபர்களும் 41, 45 வயதுடைய பலபிட்டிய, அம்பலாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றையதினம் (25) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொணராகலை, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை, மொணராகலை, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு,!

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் பணியாற்றியுள்ளார்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒக்ஸ்போர்ட் யூனியனும் நாமல் ராஜபக்ஷவின் உரையை இரத்து செய்துள்ளது.

இலண்டன் கேம்பிரிட்ஜ் யூனியனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் யூனியனும் (Oxford Union) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரையை இரத்து செய்துள்ளது. நிகழ்வு நடைபெற 24 மணித்தியாலங்களே இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியத் தமிழ் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் பிரச்சாரங்களே இந்த இரத்து நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும். போர்க்கால மீறல்கள், ராஜபக்ஷ குடும்பத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.உரை நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்ட போதிலும், நாமல் ராஜபக்ஷ தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இலண்டனில் உள்ள சிங்கள பௌத்த அமைப்புகள் மற்றும் பௌத்த துறவிகளை அவர் சந்தித்து வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு

இலங்கை வனஜீவராசிகள் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி பதக்கங்கள் வழங்கும் கௌரவிப்பு நிகழ்வு முதன்முறையாக நடைபெற்றது. கிரிதலே தேசிய வனஜீவராசிகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தலைமையில் இடம்பெற்றது. நாட்டின் வனப்பகுதிகளையும், வனவிலங்குச் சம்பத்துக்களையும் தமது உயிரைப் பணையம் வைத்துப் பாதுகாக்கும் அதிகாரிகளை ஊக்குவிப்பதையும், அவர்களைப் பாராட்டுவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சேவைக்காலம் மற்றும் வனஜீவராசிகள் தொடர்பான களக் கல்வித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 அதிகாரிகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, தத்துவார்த்த அறிவு, களத்திறன், ஒழுக்கம் மற்றும் விசேட நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய உத்வேகம் ஆகியவை இந்தப் பதக்க வழங்கலில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.வனஜீவராசிகள் திணைக்களத்தின் வினைத்திறனை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில்,இருவர் உயிரிழந்துள்ளனர்.

காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (22) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும்,  முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் அருகில் உள்ள நிர்மாணத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருடையது என தெரியவந்துள்ள. ரயில் மோதியதையடுத்து கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.இந்த விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி உட்பட மூன்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வர்த்தக லொறி ஒன்று, வட்டவளை சிங்கள பாடசாலைக்கு அருகில் உள்ள பாதாள மதகு ஒன்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.லொறிக்குள் இறுகிய நிலையில் சிக்கிக்கொண்ட சாரதி மற்றும் உதவியாளரை, பொலிஸாரும் பொதுமக்களும் சுமார் 1 மணிநேரம் போராடி மீட்டனர்.காயமடைந்தவர்கள் முதலில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களைப்பு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க