பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு புதிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம்
பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு புதிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவின் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளராக தெரிவு செய்யப்பட்ட திருமதி கஜதீபன் விதுஜா அவர்கள், 2026.06.01 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. S. முரளிதரன் அவர்களிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் மாவட்ட காணி பதிவாளரும் கலந்துகொண்டார்.
பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு நீண்டகாலமாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமிக்கப்படாத நிலையில், பல்லவராயன்கட்டு மேற்கு பிரிவின் பதிவாளரே பதில் கடமையாற்றி வந்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில், பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கென தனியான பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளதால், அப்பிரதேச மக்கள் தங்களது பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு தொடர்பான சேவைகளை இனி தமது பிரிவிலேயே இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், மக்களுக்கான சேவை வழங்கல் மேலும் வினைத்திறனுடனும் பயனுள்ளதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்
கிளிநொச்சி.

