இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒக்ஸ்போர்ட் யூனியனும் நாமல் ராஜபக்ஷவின் உரையை இரத்து செய்துள்ளது.

இலண்டன் கேம்பிரிட்ஜ் யூனியனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் யூனியனும் (Oxford Union) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரையை இரத்து செய்துள்ளது. நிகழ்வு நடைபெற 24 மணித்தியாலங்களே இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியத் தமிழ் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் பிரச்சாரங்களே இந்த இரத்து நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும்.

போர்க்கால மீறல்கள், ராஜபக்ஷ குடும்பத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.உரை நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்ட போதிலும், நாமல் ராஜபக்ஷ தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இலண்டனில் உள்ள சிங்கள பௌத்த அமைப்புகள் மற்றும் பௌத்த துறவிகளை அவர் சந்தித்து வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

 

Leave a Comment