இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் கைது

ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளால் கைது

 

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய இச்சந்தேக நபரின் பயணப்பொதியில் 1.163 கிலோகிராம் நிறை கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்கள் காணப்பட்டதாகத் தெரிவித்த சுங்க அதிகாரிகள், இவர் இலங்கை தனியார் நிறுவன விமானப் பணிப் பெண்ணென்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர். கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து விமானக் குழுவினருக்கான வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது அவரின் பயணப்பொதியில் தங்கம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Leave a Comment