தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 73இல், 61 பயனாளிகள் உள்ளீர்ப்பு.

வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 73இல், 61 பயனாளிகள் உள்ளீர்ப்பு.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்திமூன்றாம் கட்டமானது கடந்த 23.02.2026 அன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அவரது மக்கள் தொடர்பகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 61 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த செயற்றிட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடந்த 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த எழுபத்திமூன்றாம் கட்டத்துடன் இதுவரையில் 3,936 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

மேலும் வாழ்வோம் வளம் பெறுவோம் 73ஆம் கட்டத்திற்குரிய நிதி உதவியினை நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் ரவிகரன் பானுகோபன் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment