இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரூ. 500 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் கைது

ரூ. 500 மில்லியனுக்கும் (ரூ. 50 கோடி) அதிகமான தெரு மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) பிற்பகல் அஹுங்கல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, 3 வெவ்வேறு சுற்றிவளைப்புகளில், பலபிட்டிய மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 13.032 கி.கி. ஐஸ் மற்றும் 14.112 கி.கி. ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார்.

இவர்களில் கைது செய்யப்பட்ட 41 வயதான, அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து 9 மி.மீ. பிஸ்டல் வகை கைத்துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும், 3.8 மி.மீ, வகை துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்..கைதான இரு சந்தேகநபர்களும் 41, 45 வயதுடைய பலபிட்டிய, அம்பலாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.34 வயதான மற்றைய சந்தேகநபர் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரே இதனை மேற்கொண்டு வந்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.அஹுங்கல்ல பொலிஸார் சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Comment