தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புத்தாண்டில் சோகம்: மருதங்கேணியில் குடும்பஸ்தர் கத்திக்குத்துத் தாக்குதலில் பலி

புத்தாண்டில் சோகம்: மருதங்கேணியில் குடும்பஸ்தர் கத்திக்குத்துத் தாக்குதலில் பலி

யாழ்ப்பாணம், 2026 ஜனவரி 01:

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4:00 மணி அளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வடமராட்சி கிழக்கு, உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட து. தவநேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று மாலை 4:00 மணி அளவில்  புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மருதங்கேணி பகுதியில் உள்ள ஆலயமொன்றில் திருவெம்பாவை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதன்போது வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தவநேசன் என்பவரை, பின்னால் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தியுள்ளார். முன்பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

யாழ்ப்பாணம் செய்தியாளர்

01 01 2026 pm 20.03

 

 

Leave a Comment