செய்திகள் தாயகச் செய்தி 

யானை தாக்கி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் உயிரிழந்துள்ளார்

துணுக்காய், தேறாங்கண்டல் பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த  15 2026 அன்று இரவு, வயல் நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக காவலில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

 முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் இரவு வேளைகளில் வயல் காவலில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது

யானைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Comment