முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா;
முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா;
முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 நேற்றையதினம். மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது.
அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
அந்தவகையில் மரபுவழியில் விருந்தினர்களது வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து பட்டத்திருவிழாவிற்கான பட்டங்கள் விருந்தினர்களால் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பட்டத்திருவிழா இனிதே ஆரம்பித்தது.
அந்தவகையில் மிகவும் பெருந்திரளான மக்கள் இந்தப் பட்டத்திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு கடற்கரையின் வான்பரப்பானது அழகிய வண்ணப் பட்டங்களால் நிறைந்திருந்தது.
அந்தவகையில் இந்த மாபெரும் பட்டத்திருவிழாவில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்,. கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி. இராஜயோகினி ஜெயக்குமார், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேசசெயலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

