பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான நடவடிக்கை.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, அரசாங்கப் பணிகளை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் அனைத்துப் படிவங்களையும் பொதுமக்கள் மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கான வசதி எதிர்வரும் மாதத்தில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஊழியர்கள் தமது கடமைகளை 2026 புத்தாண்டில் சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் வகையில் நேற்று (01) காலை அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டார்.
நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த முப்படைகளின் போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வும், அரச சேவைக்கான ஊழியர்களின் சத்தியப்பிரமாணமும் இதன்போது இடம்பெற்றன. ஜனவரி மாதம் முதலாம் திகதி வெறும் நாட்காட்டியில் ஒரு நாள் மட்டுமல்ல. நாம் வந்த பாதையை நேர்மையாகத் திரும்பிப் பார்த்து, எப்படி முன்னேறுவது என்பதை அமைதியாக முடிவு செய்ய வேண்டிய தருணம் என்று குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

