செய்திகள் தாயகச் செய்தி 

தமிழர்களுக்கான சுதந்திரத்தை எந்த அரசாங்கத்தாலும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை வேலன் சுவாமிகள்

யுத்தம் நடைபெற்று பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழர்களுக்கான சுதந்திரத்தை எந்த அரசாங்கத்தாலும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என சைவ சமயத் தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கரிநாள் பேரணியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியள்ளார்.அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறை நீதிக்கு எதிராகவே செயற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.இவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள்ளே வழக்குகள் கொண்டு செல்லப்பட்டு முடக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

Leave a Comment