சாணக்கி யனின் நியமனம்; கட்சிக்குள் புதிய சர்ச்சை.சீ.வி.கே. சிவஞானம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா. சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிய வருகிறது. கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா. சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் அறிவித்துள்ள போதும், இவரது நியமனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையென சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். இதிலிருந்து, இந்நியமனம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்விடயத்தில்கூட கருத்து ஒற்றுமைப்பட முடியாதுள்ள இக்கட்சி,
இவ்விடயத்தில்கூட கருத்து ஒற்றுமைப்பட முடியாதுள்ள இக்கட்சி, எதிர்கால அரசியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வியையே மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தலைமைப் பதவிகளைச் சுற்றிய உள்முரண்பாடுகள் தொடருமாயின், அது கட்சியின் நம்பகத்தன்மையையும், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தனிநபர் ஆதிக்கங்களை விட கட்சியின் ஒற்றுமையும், தெளிவான முடிவெடுப்பும் இக்கட்டத்தில் அவசியமாகியுள்ளது.

