செய்திகள் தாயகச் செய்தி 

அரசியல் நோக்குடன் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் அ.அன்னராசா

அரசியல் நோக்குடன் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் அ.அன்னராசா

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் புதுச்சேரி, இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நெடுந்தீவு மற்றும் அனலைதீவு கடற்பரப்பிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றன. இவ்வாறு அவர்கள் இலங்கை கடற்பரப்பினை அழித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் பாரத பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். பாரத பிரதமருக்கு கடிதத்தினை எழுதி, தொடர்ந்து அரசியல் நாடகத்தினை செய்யாதீர்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் முதலாளி வர்க்கத்தினரிடம் தான் இந்த இழுவைமடித் தொழில்கள் இருக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் தான் எமது கடல் வளத்தை அழிக்கின்றனர். முதலமைச்சர் நினைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து இழுவைமடித் தொழில்களையும் நிறுத்தலாம், என தெரிவித்துள்ளார் .

Leave a Comment