அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக , புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது
அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது
திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை ஜனவரி 19 வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் 16 ஆம் திகதி குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், இது கரையோர பாதுகாப்பு சட்டங்களுக்கு முரணானது எனவும் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, போதிராஜ விகாரை என தெரிவிக்கப்படும் குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்ற முயன்ற போது, புத்த பிக்குகள் உள்ளிட்ட சிறு குழுவினரால் எதிர்ப்பு எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவானது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை பரிசீலித்த நீதவான், சம்பந்தப்பட்ட அனைவரையும் எதிர்வரும் ஜனவரி 19 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

