பிரித்தானிய பிரதிப் பிரதமருடன் தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு!
பிரித்தானிய பிரதிப் பிரதமருடன் தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர் Rt Hon. David Lammy மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) ஆகியோருக்கும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் நல்லிணக்கம், நீதி மற்றும் தமிழ் சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கவும், நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், தமிழ் பிரதிநிதிகளின் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்யவும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் தேசிய இனப் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் ஐக்கிய இராச்சியம் எப்போதும் துணைநிற்கும் என உறுதி அளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

