சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

ஒன்றிய அரசே! இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாத அராஜகத்தை வேடிக்கைப் பார்க்காதே! வேல்முருகன்

ஒன்றிய அரசே! இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாத அராஜகத்தை வேடிக்கைப் பார்க்காதே! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

இந்தியப் பெருநிலத்தில் வாழும் எட்டு கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக நடவடிக்கை எடு!தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களைத் திட்டமிட்டு அபகரித்து,புத்த பிக்குகள் மூலமாகத் தமிழர் பகுதிகளில் புத்த விகாரைகள் அமைக்கும் இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாதத் தமிழர் விரோத அரசியல் போக்கைத்தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சொந்த நிலத்தையும்,சொந்த வீட்டையும்,தாம் வழிபட்ட ஆலயத்தையும் காக்கும் நோக்கில் போராடிய, அப்பாவித் தமிழ் மக்களை
ஈவிரக்கமின்றிக் கைது செய்து சிறையில் அடைக்கும் இலங்கை அரசு, அதே நேரத்தில் தமிழர் நில அபகரிப்பில் முன்னின்று செயல்பட்ட பிக்குவுக்கு,
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து விருது வழங்கி விழா நடத்துவது இலங்கையில் நிலவும் “ஜனநாயகத்தின் மீதானத் தாக்குதலின்” கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. இது தனிப்பட்ட சம்பவமல்ல தமிழீழத் தமிழர்களின் நிலம்,சமயச்சுதந்திரம் மொழி,பண்பாடு ஆகிய அனைத்தையும்
முழுமையாக அழிக்கும் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையின் தொடர்ச்சியே ஆகும். இந்தியப் பெருநிலத்தில் வாழும் எட்டு கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்க வேண்டிய கடமை, இந்திய ஒன்றிய அரசுக்கும் வெளியுறவுத் துறைக்கும் உள்ளது.எனவே,
“நட்பு நாடு” எனக் கூறிக்கொள்ளும் இந்திய அரசு,இலங்கை அரசுடன் உடனடியாகப் பேசி,சொந்த நிலத்திற்காகப் போராடிய தமிழர்களைக் கைது செய்ததை,
தமிழர் பகுதிகளில் புத்த விகாரங்கள் அமைக்கும் அரசியல் திட்டத்தை, தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதைத்
தெளிவாகவும், உறுதியாகவும் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய அரசு தனது சர்வதேசப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இந்நிலையில்,அநீதிக்கு எதிராக உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரித்து வாழ்த்துகிறது.

Leave a Comment