அநுரகுமார அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு
அநுரகுமார அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு
எதிர்வரும் 20/01/2026 ( புதன்கிழமை ) காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவில் எழுவைதீவு J/39 கிராம அலுவலர் பிரிவில் காளவாடியடைப்பு என்ற இடத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 53 பேர்ச்சஸ் அளவுள்ள காணி சிறீலங்கா கடற்படையின் எலரா படையணி முகாம் அமைப்பதற்காக நில அளவைக் காரியாலயத்தினால் சுவீகரிப்படவுள்ளது.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இதே காணியை கடற்படையினருக்காக அபகரிக்க முயன்றபோது எழுவைதீவு மக்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

