எரிபொருள் கப்பலொன்று நேற்று நாட்டை வந்தடைந்து
எரிபொருள் கப்பலொன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40,000 மெற்றிக் தொன் எரிபொருளுடன் இக்கப்பல் நாட்டுக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது; நாட்டுக்கு வந்துள்ள கப்பலில் 32,000 மெற்றிக் தொன் டீசலும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் உள்ளன. தரப்பரிசோதனையின் பின்னர், தரையிறக்கப்பட்டு இது விநியோகத்துக்கு அனுப்பப்படும். எதிர்வரும் காலங்களில் எவ்வித தட்டுப்பாடுகளுமின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென்றும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

