அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நேரடி தலையீடுகளை மேற்கொள்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை  சந்தித்து கலந்துரையாடிய போதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இவ்வாறு உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதே  இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தேவையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக சஜித் பிரேமதாச இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், அவற்றுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நேரடியாக தலையிடுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அன்மைச் செய்தி

Leave a Comment