இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடற்பிராந்திய ங்களுக்கு சிவப்பு அறிவிப்பு; கடலுக்கு செல்லத் தடை

நாட்டின் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.​அந்த வகையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வர தொழில்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகளை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கிணங்க, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கடல்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளை களில் அக் கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகளை அவதானிப்பில் கொள்ளுமாறு கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் அறிவுறுத்தப்படுகின்றனர்

அன்மைச் செய்தி

Leave a Comment