இலங்கை செய்தி. 

ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை எச்சரிக்கை

நாட்டின் ஆறு மாவட்டங்களில் நிலவவுள்ள அதிக வெப்பநிலை குறித்து முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளது.

மனித உடலால் உணரப்படும் அளவில் இம்மாவட்டங்களில் வெப்பநிலை, உச்சந்தொடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவில் நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன வீட்டிலுள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தம்படியும் திணைக்களம் கேட்டுள்ளது.அதேவேளை, சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment