தேசிய வீட்டுத்திட்டம் 2026; கிளிநொச்சியில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட 3 புதிய வீடுகள்
தேசிய வீட்டுத்திட்டம் 2026;கிளிநொச்சியில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட 3 புதிய வீடுகள்
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர் டி.பி.சரத் நேற்று (16) கிளிநொச்சி மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 3 புதிய வீடுகள் பிரதியமைச்சர் T. B. சரத்தினால் சம்பிரதாய பூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இளங்குமரன் ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த வீடு, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. போரின் பாதிப்பு,குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகின்றது.

