இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம்

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் (05) ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு குறிப்பிடும்போதே லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய விலைத்திருத்தம் தொடர்பான பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ள அவர், நிதியமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்றார். பெரும்பாலும் எதிர்வரும் (05) ஞாயிற்றுக்கிழமை புதிய விலைத்திருத்தம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுவரை, தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது. நாட்டின் நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அன்மைச் செய்தி

Leave a Comment