இலங்கையின் எதிர் கால அபிவிருத்தி க்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும்
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்குமென, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ட்ரூ பெற்றிக் தெரிவித்தார்.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தனஅபயரத்ன மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல், அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தும் வகையில், இந்த சந்திப்பு இடம் பெற்றது.பல்வேறு நெருக்கடியான காலங்களில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் இச்சந்திப்பில்,பாராட்டினார்.
அத்துடன் நாட்டின் பல அபிவிருத்தித் துறைகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.இலங்கையின் தற்கால அரச சேவை கட்டமைப்பிலுள்ள பழைய முறைகளுக்குப் பதிலாக, அவை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் சீரமைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இதற்கான மனிதவளப் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

