தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் கடலில் காணாமல் போன மீனவர்கள்; தமிழக கடற்பரப்பில் கைது!

யாழ் கடலில் காணாமல் போன மீனவர்கள்; தமிழக கடற்பரப்பில் கைது!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதி. கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் படகு பழுதடைந்த நிலையில் மாயமானார்கள்.மீன்பிடிக்கச் சென்றபோது இவர்களது படகு இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்து, நீரோட்டத்தினால் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றது.அங்கு இருந்த இந்திய மீனவர்கள் இவர்களைக் கவனித்து, அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி, அவர்களது படகை இழுத்துச் சென்று இலங்கை கடல் எல்லையில் விட்டுச் சென்றனர்.

மீண்டும் எல்லை தாண்டிய படகு:

எனினும், கடல் அலையினால் படகு மீண்டும் இழுத்துச் செல்லப்பட்டு இந்தியக் கரைக்குச் சென்றுள்ளது.காணாமல் போன ஏழாவது நாளில், நேற்று வியாழக்கிழமை தமிழகத்தின் வடக்குக் கரையில் உள்ள அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழக கடலோரக் காவல் படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர்.

 

Leave a Comment