செய்திகள் தாயகச் செய்தி 

பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் முற்றுகையிட்டு போராட்டம்

யாழ். மாநகர சபை உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்த்து மாநகர சபையை  முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ். மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் இன்றையதினம் (13) குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் மாநகர சபை உறுப்பினர் தர்சானந், ஒவ்வொரு மாதமும் குறளிவித்தை காட்டி தன்னை பிரபல்யப்படுத்த முயற்சிக்கும் சுயநினைவற்றவர் என்று யாழ். நகர பழக்கடை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.நீதிமன்றின் உத்தரவில் தமக்கு அன்றைய ஈ.பி.டி.யின் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் ஆட்சியில் வழங்கப்பட்ட கடைகளை காழ்புணர்ச்சியின் காரணமாகவே அகற்ற முயற்சிக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இங்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், “நாம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே போராடுகின்றோம். ஆனால் எமது நிலையை மாநகரின் உறுப்பினர் தர்சானந்த் உணரவில்லை. அவர் சுயநினைவின்றியே இருப்பதாக தோன்றுகின்றது.

அன்மைச் செய்தி

Leave a Comment