நீர்கொழும்பு கடற்பரப்பில் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலை
நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான கப்பலொன்று நீர்கொழும்பு கடற்பரப்பில் நடாத்திய சுற்றிவளைப்பி்ன்போதே கடற்பரப்பில் கைவிடப்பட்ட பதினாறு (16) பொதிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

