தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விசேட கவனம் அமைச்சர் ஆனந்த விஜேபால

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அம்மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாகவும் நிவாரணப்பணிகள் தொடர்பாகவும் குளங்கள், வீதிகள் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடுகள் தொடர்பாகவும் இவற்றை புனரமைப்பதற்கு தேவையான நிதி தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

Leave a Comment