தாயகச் செய்தி 

தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம்

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இணுவில் மேற்கைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி இளைஞருக்கு வலிப்பு வருவதாகவும் நேற்று முன்தினம் (25) பிற்பகல் தந்தையாரின் மரக்காலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தெல்லிப்பளையில் உள்ள அவர்களின் பிறிதொரு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன். மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை  காவல்துறை மேற்கொண்டுள்ளனர்.      

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

குடமுருட்டி பாலத்திற் கருகில் தடண்புரண்டு விபத்துக் குள்ளான பாரவூர்தி ;

கிளிநொச்சி – குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பாரவூர்தி ஒன்று தடண்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளனது. குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகின்றது. விபத்தின் போது கொள்கலனில் இருந்த பெருமளவு டீசல் கசிந்து வெளியேறி விரயமாகியுள்ளது. இந்த விபத்தினால், குறித்த டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதையடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் இதுவரை கரை சேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான அ.ஆனதாஸ் (38 வயது) என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த மீனவர் வியாழக்கிழமை (26) அதிகாலை மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ளதுடன் வழமையாக 9.00 மணியளவில் கரை சேரும் இவர் இதுவரை திரும்பி வராத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்ற வேளை, அவர் பயணித்த கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது. மணல்காடு மீனவர்கள் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதுடன் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.

மேலும் படிக்க